Friday, August 12, 2011

ஊரில் குடிக்க தண்ணீர் இல்லை. ஜைநூரில் ஆற்றில் இருந்து குழாய் மூலம் பர்கூர் செல்லும் தண்ணீரை குடிதுக்கொண்டிருக்கின்றனர் ஐகுந்தம் ஊர்பொது மக்கள். எழுநூற்று யைம்பது அடியிலும் தண்ணீர் இல்லை.
வாழ்க கிராமத்தான்....

Tuesday, November 2, 2010

நன்றி நவில்தல்

எங்கள் தெரு மளிகைக்கடைக்காரர் சொன்னது போலவே இனிதாக 'மன்றல் விழா' நடந்து முடிந்தது. வந்திருந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி என்ற வார்த்தை சிறிது.  அதையும் தாண்டி நினைவில் இருத்திக் கொள்கிறேன். அலைபேசி, மின்னஞ்சல் மூலம் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

Saturday, September 18, 2010

என் தங்கமணியே !

கண்ணில் வரைந்தாய் 
என் ஓவியத்தை 
இதயத்தில் வரைந்தேன் 
உன் உருவத்தை 
எங்கும் எதிலும் 
உன்னைக் காணவில்லை 
என்னில் நீ மட்டும்
உன்னில் நான் மட்டும் 
நம்மில் நாம் மட்டுமே 
கரைந்து கொண்டிருக்கிறோம் 
இத்தருணத்தை 
உலகில் 
எதனோடு ஒப்பிட 
என் தங்கமணியே !

Friday, September 3, 2010

கவிதை

உன் மீது கொண்ட கோபம்
வானில் ஏவும் ஏவுகணை;
அன்பு
அந்த வானமே... 


Monday, August 23, 2010

பெருமலை (பெருமாள் மலை)

ஊரைச் சுற்றிய மலைகள்:
பெருமலை (பெருமாள் மலை) ஊரின் முகப்பு தோற்றத்தில் காணப்படும் இம்மலை  சுமார் 2000 மீட்டர்  உயரமுடையது . காலையிலேயே எழுந்து இரவு படுக்க செல்வதற்குள் பெருமலையை காணமல் படுப்பவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் . பழைய ஆட்கள் சிலர்  இம்மலையை வணங்கிவிட்டு வேலையை பார்ப்பது வழக்கம். ஆடி பதினெட்டு, புரட்டாசி மாதம், வீட்டில் யாராவது இறந்துவிட்டால் , பெரும்பான்மையான சனிக்கிழமைகள் ஐகொந்தம் உட்பட மலையைச் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து மக்கள் இங்கே கூடுவார்கள்.  

Tuesday, July 27, 2010

ஊர் பெயர்



ஐ கொந்தம் என்னும் பெயருடைய  கிராமம் ....ஐ கொந்தம் மருவி இப்பொது ஐகுந்தம் ஆக இருக்கிறது .  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்கு உட்பட்டது...சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டது. ஊரை மேலிருந்து பார்த்தால் கூட்டல்(+) குறி போன்று இருக்கும். ஊருக்கு சிறப்பு மாங்கா  பழம்(மாம்பழம்) அடுத்து சீதா பழம் .